பழனி
இன்று பழனிமலை முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது.
பழனி மலை மீது அமைந்துள்ள உலக புகழ்பெற்ற முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை, யானைப்பாதை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர பக்தர்கள் மலைக்கோவிலுக்கு எளிதில் சென்றுவர ரோப்கார், மின்இழுவை ரயில் ஆகிய சேவைகள் பயன்பாட்டில் உள்ளது.
இவற்றில் ரோப்கார் வழியாக விரைவாகவும், அங்குள்ள இயற்கை அழகை பார்த்து ரசித்தபடியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலானோர் ேராப்காரில் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ரோப்கார் சேவை பக்தர்களுக்கு சிறந்த சுற்றுலா அனுபவத்தை கொடுக்கிறது.
பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பழனி ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கமாகும். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணி மேற்கொள்ளப்படும்.
பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில், இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி வதால் ரோப்கார் சேவை இன்று நிறுத்தப்படுகிறது. பக்தர்கள் மின்இழுவை ரயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.