சென்னை
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெங்களூருவீல் நடந்த உலக குதிரையேற்ற போட்டியில் வென்றோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் வலைத்தளத்தில்,
”பெங்களுருவில் நடைபெற்ற உலக குதிரையேற்றக் கூட்டமைப்பின் Federation Equestre Internationale’s World Dressage Challenge-2024, தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்று பதக்கங்களை குவித்த வீரர் – வீராங்கனையரை இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
குறிப்பாக, தங்கை மிராயா தாதாபோய் தங்கப் பதக்கத்தை வென்று சாதனைப் படைத்ததோடு ஆசியாவின் Best Youth Rider பட்டத்தையும் பெற்றுள்ளார். மேலும், உலக குதிரையேற்ற தரவரிசையில் ஐந்தாம் இடத்தையும் பிடித்து தமிழ்நாட்டுக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்.
அவர் உட்பட குதிரையேற்றத்திலும் வெற்றிக்கொடி நாட்டிய தமிழ்நாட்டு வீரர் – வீராங்கனையரின் சாதனைகள் தொடர வாழ்த்தி மகிழ்ந்தோம்.”
என்று பதிவிட்டுள்ளார்.