இன்று 5,860 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,32,105 ஆக உயர்வு

Must read

சென்னை: தமிழகத்தில் இன்று  ஒரே நாளில்  5,860 பேருக்கு தொற்று உறுதியான நிலையில்,  தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  3,32,105 ஆக உயர்ந்துள்ளது.

அதிக பட்சமாக சென்னையில் 1179 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரமாக குறைந்த வந்த தொற்று பாதிப்பு நேற்று முதல் மீண்டும் ஆயிரத்தை கடந்து உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 5,236 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

அதே வேளையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை  127 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 2,72,251 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 81.97% ஆக உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 127 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 5,641- ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 135 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தற்போது 54,213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை 36,40,796 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 71,343 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 5,860 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2,00,253 ஆண்கள், 1,31,823 பெண்கள், 29 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

More articles

Latest article