டில்லி
இன்று காலை 8 மணிக்கு 4 மாநில சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி உள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தெலுங்கானா, சத்தீஸ்கர் , மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 ஆம் தேதிகளில் இரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது,
மத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17ல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து நவம்பர் 7 ஆம் தேதி மிசோரம் மாநிலத்திலும், நவம்பர் 23 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்திலும், நவம்பர் 30 ஆம் தேதி தெலங்கானா மாநிலத்திலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
அனைத்து மாநிலங்களிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருந்தது. ஆனால் இன்று மிசோரம் மாநிலத்தில் விசேஷ தினம் என்பதால் அங்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணிக்கு மீதமுள்ள 4 மாநிலங்களான தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மற்றும் மத்தியப் பிரதேச சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது. இங்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.