திருப்பதி

ன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை வனபோஜன உற்சவம் நடைபெறுகிறது.

இன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே வைபவ உற்சவ மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன உற்சவம் நடக்கிறது. வழக்கமாக இந்த உற்சவம் கோகர்பம் அணை அருகில் உள்ள பார்வேடு மண்டபத்தில் நடக்கும். தற்போது மழை பெய்து வருவதாலும், புயல் உருவாகி உள்ளதாலும் வைபவ உற்சவ மண்டபத்தில் நடத்தப்படுகிறது.

இதையொட்டி இன்று காலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்ப சாமியை வைபவ உற்சவ மண்டபத்துக்குக் கொண்டு சென்று அங்குக் காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணிக்குள் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்ப சாமிக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

பிறகு கார்த்திகை வனபோஜன உற்சவம் நடத்தப்பட்டு, அங்கிருந்து உற்சவர்களைக் கோவிலுக்குக் கொண்டு வருகிறார்கள்.

இன்றைய கார்த்திகை வனபோஜன உற்சவத்தையொட்டி ஏழுமலையான் கோவிலில் இன்று நடக்க இருந்த ஆர்ஜித சேவைகளான கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.