சென்னை

ன்று தமிழகத்தில் 8 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் 50000 இடங்களில் தொடங்கி உள்ளது.

நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளது.  ஆயினும் விரைவில் மூன்றாம் அலை தாக்குதல் ஏற்படலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.   இதையொட்டி கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.

இதன்படி தமிழகத்தில் ஒவ்வொரு வார இறுதியிலும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்து வருகின்றன.    இதுவரை தமிழகத்தில்  பெரும்பாலானோர் முதல் டோஸ் தடுப்பூசிகள் போட்டு கொண்டுள்ளனர். ஒவ்வொரு முகாமிலும் நிர்ணயிக்கப்படும் இலக்கை விட அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

அவ்வகையில் தமிழகத்தில் இதுவரை 7 முகாம்கள் நடந்துள்ளன.  இன்று காலை 8 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் 50000 இடங்களில் தொடங்கி உள்ளது.  ஏற்கனவே பலர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதால் இந்த முகாமில் இரண்டாம் டோஸ் தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

[youtube-feed feed=1]