சென்னை:  தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை, மாநிலத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து, அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்றுமேலும் 809  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.  தலைநகர் சென்னையில் 120 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கோவையில் 134 பேருக்கு உறுதி செய்யப்பட்டு, மாநிலத்தில் அதிகம் பாதிப்புக்கு உள்ளான மாவட்டமாக மீண்டும் கோவை இடம் பெற்றுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று இரவு 7.30 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் இன்று 1,01,034 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 5,25,42,503 சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.

இன்று மேலும் 809 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 27,14,025 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி 14 பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,273 ஆக அதிகரித்துள்ளது.  அதே வேளையில் 934 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளதால், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,68,001 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று பாதிப்பில் கோவை மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது. அங்கு இன்று 134 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், சென்னையில் 120 பேருக்கும், ஈரோட்டில் 76 பேருக்கும், செங்கல்பட்டில் 65 பேருக்கும் திருப்பூரில் 51 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு:

தலைநகர் சென்னையில் இன்று 120 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 5,56,166 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 3 பேர் பலியானகி உள்ளதுடன். இன்று மட்டும் 103 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது சென்னையில் மட்டும்  1220 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்:

அரியலூர் 2
செங்கல்பட்டு 65
சென்னை 120
கோவை 134
கடலூர் 12
தர்மபுரி 17
திண்டுக்கல் 3
ஈரோடு 76
கள்ளக்குறிச்சி 11
காஞ்சிபுரம் 17
கன்னியாகுமரி 15
கரூர் 16
கிருஷ்ணகிரி 4
மதுரை 8
மயிலாடுதுறை 0
நாகப்பட்டினம் 7
நாமக்கல் 37
நீலகிரி 15
பெரம்பலூர் 0
புதுக்கோட்டை 5
ராமநாதபுரம் 1
ராணிப்பேட்டை 2
சேலம் 43
சிவகங்கை 9
தென்காசி 0
தஞ்சாவூர் 25
தேனி 1
திருப்பத்தூர் 1
திருவள்ளூர் 25
திருவண்ணாமலை 6
திருவாரூர் 14
தூத்துக்குடி 3
திருநெல்வேலி 11
திருப்பூர் 51
திருச்சி 41
வேலூர் 7
விழுப்புரம் 3
விருதுநகர் 2