13/11/2021 Corona Status: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 11,850 பேர் பாதிப்பு, 555 பேர் உயிரிழப்பு…

Must read

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 11,850 பேர் பாதிப்பு, 555 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இன்று காலை 9.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24மணி நேரத்தில்  புதிதாக 11,850 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,44,26,036 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் மேலும்  புதிதாக 555 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி  இறந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 463245 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.35% ஆக உள்ளது.

கடந்த 24மணி நேரத்தில்  12403 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 33826483 ஆக உயர்ந்துள்ளது. கொரோனவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.26% ஆக அதிகரித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 136308 பேருக்கு கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் நேற்று 58,42,530 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதுவரை 1,11,40,48,134 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 12,66,589 சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 62,23,33,939சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.

More articles

Latest article