download (1)இளையராஜா  பிறந்தநாள் (1943)
1976ம் ஆண்டு, அன்னக்கிளி  திரைப்படத்துக்கு இசை அமைத்து   தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இளையராஜா.   இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். இந்திய திரைப்படங்களில் மேற்கத்திய பாரம்பரிய இசையைப் புகுத்தியவர்களில் இளையராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.
ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் “மேஸ்ட்ரோ” என்று அழைக்கப்படுகின்றனர். ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ் திரைப்படக் கலைஞர்களால் “மேஸ்ட்ரோ” என்று அழைக்கப்படுகின்றார்.
இளையராஜா, “பஞ்சமுகி” என்ற கருநாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கியுள்ளார்.
“How to name it” என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்தது இந்த இசைத்தொகுப்பு. இத்தொகுப்பினை இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் மற்றும் மேற்கத்திய இசையமைப்பாளரானஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார்.
“Nothing But Wind” என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர் ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார்.
“India 24 Hours” என்ற இந்திய பண்பாட்டின் பல்வேறு வர்ணங்களை விவரிக்கும் ஆவண-குறும்படத்திற்கு பின்னணி இசையினை அமைத்தார். இதில் வலி, மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது சிறப்பாகும்.
1996 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தார்.
“ராஜாவின் ரமண மாலை” என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார். இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.
“இளையராஜாவின் கீதாஞ்சலி” என்ற பக்தி இசைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
ஆதி சங்கரர் எழுதிய “மீனாக்ஷி ஸ்தோத்திரம்” என்ற பக்திப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
“மூகாம்பிகை” என்ற பெயரில் கன்னட பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார்.

  • இளையாராஜா பெற்ற விருதுகள்..

தமிழக அரசின் கலைமாமணி விருது
1988ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது
1995ஆம் ஆண்டு கேரள அரசின் விருது
இசையில் சாதனை புரிந்ததற்காக 1994ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினாலும், 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினாலும் முனைவர் பட்டம் (டாக்டர் – Degree of Doctor of Letter) பெற்றவர், இளையராஜா.
மேலும்..
இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை ஐந்து முறைப்பெற்றுள்ளார்.
இந்திய அரசின் உயரிய பத்ம பூஷண் விருதும் இளையராஜா பெற்றுள்ளார்.
 
download (2)
 
மணிரத்தினம் பிறந்தநாள் ( 1956)
இந்திய அளவில் அறியப்படும் தமிழ் இயக்குனர்களுள் ஒருவர் மணிரத்தினம்.
இவருடைய படங்கள் சுருக்கமான வசனங்களுக்கும், நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும் பெயர் பெற்றவை. இவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்தும் இளையராஜா மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் இருவரின் இசையமைப்பில் வெளியாகியுள்ளன. இவரது முதல் திரைப்படமான பல்லவி அனுபல்லவி முதல் தளபதி வரை இளையராஜா இசையிலும், ரோஜா முதல் இன்று வரை ஏ. ஆர். ரஹ்மான் இசையிலும் வெளியாகியுள்ளன. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை திரையிசைக்கு அறிமுகம் செய்தவர் இவர்.