13346585_859512474160471_418603527543603411_n
1971 ஜீன் 2ந்தேதி முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் உலக பாலியல் தொழிலாளர்கள் தினமாய் அனுசரிக்கப்படுகிறது.   அதற்கு முந்தைய வருடம்.. அதாவது, 1976ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி, பிரான்சு நாட்டின் லியோன் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் நூற்றுக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள் ஆவேசமாக புகுந்தார்கள்.
தங்களின் கொடுமையான அவல வாழ்க்கைக்கு தீர்வு காண வேண்டும் எனும் கோரிக்கை உள்ளிட்ட பல வாழ்வியல் உரிமைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தினார்கள். எட்டு நாட்களுக்கு பின்,அந்த  தேவாலயத்தில் நுழைந்த பிரான்சு நாட்டு காவல்துறை அவர்களை அப்புறப்படுத்தியது.
ஆனாலும்  பாலியல் தொழிலாளர்களுக்கான  சில உரிமைகள்  அளிக்கப்பட்டன. அந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் தான் ஜீன் 2ந்தேதி பாலியல் தொழிலாளர் தினமாய் அனுசரிக்கப்படுகிறது.