சென்னை: இன்று திருவள்ளுவர் தினதை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் நான்கு வாக்குறுதிகளை தெரிவித்துள்ளார் .

நாடு முழுவதும் நேற்று (ஜனவரி 15) தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இன்று, விவசாயத்திற்கு உறுதுணையாக இருந்து வரும் மாடுகளை கவுரவிக்கும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. மேலும், இன்றுதிருவள்ளுவர் தினமுமாகும்.
இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில்,
அஞ்சாமை மனிதநேயம் அறிவாற்றல் ஊக்கமளித்தல் – வள்ளுவன் சொன்ன இவை நான்கும் நமது ஆட்சியின் அடிநாதம்!
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு – திருவள்ளுவர் சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல்.
வறியோர் எளியோர் வாழ்வுயர மனிதநேயத் திட்டங்கள். இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள்.
தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள்.
இவை நான்கும் தமிழ்நாட்டில் தொடரும் என்பது இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு நான் தரும் வாக்குறுதி! என்று கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]