சென்னை: தமிழ்நாட்டில் சொத்து வரி செலுத்த இன்று கடைசி நாளாகும்.  இதுவரை சொத்துவரி செலுத்தாதவர்கள் இன்றே செலுத்தும்படி சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

 

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அரையாண்டுக்கான சொத்து வரி என இரு முறை சொத்து வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு நிதியாண்டில் சொத்து வரியை செலுத்த அக்டோபர் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வீடு, கடைகள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் விரைந்து சொத்து வரியை செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

தற்போது பாதிக்கும் மேற்பட்டோர் இன்னும் சொத்து வரியை செலுத்தாத காரணத்தால் உரிமையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக தகவல் அனுப்பப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல் அக்டோபர் 30 ஆம் தேதிக்கு மேல் சொத்து வரியை செலுத்தினால் ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.