சென்னை: நாடு முழுவதும் 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம், புதுவை மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைகிறது.

தமிழகம், புதுச்சேரி,கேரளா ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் கடந்த 12ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது.  அதைத்தொடர்ந்து,   இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் பணி முடிவடைகிறது.

இதுநாள் வரை வேட்புமனுத்தாக்கல் செய்யாதவர்கள் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்யவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில்  சேர்த்து இதுவரை (18ந்தேதி மாலை நிலவரப்படி) சுமார் 4034 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். புதுச்சேரியில் 267 பேரும், கேரளாவில் 1029 பேரும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

3 மாநிலங்களிலும்  நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு செய்யப்படுகிறது. வரும் 22ஆம் தேதி வேட்பு மனுவை வாபஸ் செய்ய கடைசி தினம் என்றும் அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது