டில்லி

ன்றே வங்கிகளில் ரூ.2000 நோட்டுக்களை மாற்றக் கடைசி நாள் ஆகும்.

கடந்த மே மாதம் 10 ஆம் தேதி நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது., மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் செப்டம்பர் 30ம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

பிறகு ரூ.2000 நோட்டை மாற்றுவதற்கான கால அவகாசம் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டது. இதன்படி ரூ.2000 நோட்டை வங்கிகளில் மாற்ற இன்றே கடைசி நாளாகும்.

வங்கிகளில் இன்றைக்கு ரூ.2000 நோட்டை மாற்ற முடியாதவர்கள், நாளை முதல் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ரூ.20,000 வரை ரூ.2000 நோட்டை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள19 கிளைகளில் தனிநபரோ, நிறுவனமோ ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும்  ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.