அத்திவரதர் தரிசனம் இன்றே கடைசி! வி.ஐ.பி., வி.வி.ஐ.பி. தரிசனம் கிடையாது

Must read

காஞ்சிபுரம்:

த்திவரதரை தரிசிக்க இன்றே கடைசி நாள். இன்று பொது தரினத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாகவும், வி.ஐ.பி., வி.வி.ஐ.பி. போன்ற எந்தவொரு சிறப்பு தரிசனமும் கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்து உள்ளார்.

40ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளி, 48 நாட்கள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும், காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் (ஜூலை(  1–ந்தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கடந்த மாதம் சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் இந்த மாதம் (ஆகஸ்டு) 1–ந் தேதி முதல் நின்றகோலத்தில் அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

நேற்று   46– வது நாளான இன்று அத்திவரதர் ஏலக்காய் மாலை, துளசி மாலை, ரோஜாப்பூ மாலை, தாமரை பூமாலை என்று மலர் அலங்காரத்தில் வெண்பட்டு அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.  இன்று 47வது நாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அவரை தரிசிக்க லட்சக்கணக்கானோர் குழுமி உள்ளனர்.  இன்றுடன்  அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறுகிறது.

அதைத்தொடர்ந்து 48வது நாளான நாளை  (17-ம் தேதி – சனிக்கிழமை) அத்திவரதர் சிலை கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் மீண்டும் வைக்கப்படுகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பொன்னையா,  அத்திவரதர் தரிசனம் செய்ய இன்று (16-ம்தேதி) எந்தவித பாஸ்களும் செல்லாது. காலை 5 மணி முதல் இரவு வரை பொதுதரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

விஐபி, விவிஐபி, ரூ.300 மற்றும் ரூ.500 கட்டண தரிசனங்கள் உள்ளிட்ட எந்த சிறப்பு தரிசனமும் நாளை கிடையாது எனவும்  தெரிவித்து உள்ளார்.

More articles

Latest article