சென்னை
இன்று இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஆகும்.
வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம்தேடி இளநிலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஜூலை 15 முதல் இதற்கான விண்ணப்ப பதிவு நடந்து வருகிறது. இதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 6 என அறிவிக்கப்பட்டிருந்து. மேலும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதியலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.
மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேசிய தேர்வு முகமை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசத்தை நீட்டி உத்தரவிட்டது. தற்போது இந்த விண்ணப்பங்களை இணையம் மூலம் அளிக்க கடைசி தேதியாக இன்று ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
எனவே இன்று மாலை 5 மணி வரை neet.nta.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வுக்கான கட்டணத்தை இன்று இறவு 11.50 வரை செலுத்தலாம் எனவும் நாளை அதாவது 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி பகல் 2 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைத் திருத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.