சென்னை: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக மத்திய அரசு செய்யப்பட்டதால், அதை கண்டித்து, தமிழ்நாட்டுக்காக 1991ம் ஆண்டு ஜூலை 29ந்தேதி, தனது மத்திய அமைச்சர் பதவியை தியாகம் செய்தவர் வாழப்பாடி இராமமூர்த்தி. இன்றைய தினம் தமிழக வரலாற்றிலும் குறிப்பாக காவிரி விவகாரத்திலும், தமிழக வரலாற்றிலும் பொன்னெழுத்துக்களால் பொரிக்கப்பட்ட நாள்.
காவிரி விவகாரத்தில் , தமிழ்நாட்டுக்காக வாழப்பாடியார் தனது மத்திய அமைச்சர் பதவியை துறந்த நாள் இன்று (ஜூலை 29, 1991)
தமிழ்நாட்டுக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே காவிரி பிரச்சினை 100ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டும், ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு மதிக்காத நிலையே தொடர்ந்து வருகிறது. ஒவ்வொரு முறையும், காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகாவிடம் மன்றாட வேண்டிய நிலையே இன்றளவும் தொடர்கிறது. மத்தியில் யார் தலைமையில் ஆட்சி நடைபெற்றாலும் காவிரிக்காக தமிழக அரசு கர்நாடகத்துடன் போராடும் நிலையே இன்றுவரை உள்ளது.
ஆனால், தமிழக மாநில காங்கிரஸின் தலைவராகவும், ஆறு முறை இந்திய மக்களவை உறுப்பினராகவும், இருமுறை மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தி. இவர் 1991-92ல் பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
அப்போது, (1992-ம் ஆண்டு) தமிழ்நாட்டுக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே காவிரி பிரச்சினை தீவிரமாக இருந்து வந்தது. காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்துமாறு, தமிழ்நாடு அரசு சார்பில், மத்திய காங்கிரஸ் அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதை கண்டுகொள்ளாத பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் மாநில காங்கிரஸ் அரசுக்கு ஆதரவான மனநிலையில் செயல்பட்டது.
இதுகுறித்து பிரதமரிடம் ஆதங்கப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் வாழப்பாடி இராமமூர்த்தி, தனது கோரிக்கையை பிரதமர் செவிமடுக்காத காரணத்தால், தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, மத்தியஅரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
இதன் காரணமாக வாழப்பாடியார் தமிழக மக்கள் மத்தியில் புகழ் பெற்றார். மத்திய அரசு காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய வாழப்பாடியார் தமிழக வரலாற்றில் மறக்க முடியாத மாமனிதராக உயர்ந்து நிற்கிறார்.
காவிரி உள்ளவரை வாழப்பாடியாரும் புகழும் நிலைத்து நிற்கும்…