மிழ்நாட்டில் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதன்முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. அதைத்தொடர்ந்து முதல்வராக காமராஜர் 1954ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தமிழ்நாட்டின் முதல்வராக பதவி ஏற் நாள் இன்று. 1954ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு ((13-04-1954)  அன்று அவருக்கு மாநில முதல்வராக அப்போதைய கவர்னர் ஸ்ரீபிரகாசா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

விருதுநகரைச் சேர்ந்த காமராஜர் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.  நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி மீது கொண்ட ஈடுபாட்டால், தனது 16ஆம் வயதில் காங்கிரஸ் கட்சியின் தொண்டனாக அரசியலில் இணைந்து பணியாற்றிய காமராஜ் தனது 36வயது வயதில் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உயர்ந்தார். வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக இறங்கிய காமராஜர், அதற்காக ஒன்பது வருட சிறை வாழ்க்கை அனுபவித்தவர்.

இந்திய சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற்றது. அக்காலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற ராஜாஜி சிறிது காலத்திலேயே கட்சிக்குள்ளே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் முதலமைச்சர் பதவியைத் துறந்தார். இதையடுத்து அப்போது மாகாண காங்கிர கமிட்டி தலைவராக இருந்த காமராஜ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 13-4-1954ல் மாநில முதல்வராக பதவி ஏற்றார். அதன்பிறகே தேர்லில் போட்டியிட்டு வெற்றிபெற்று, தனது முதல்வர் பதவியை நிரந்தரமாக்கினார். 10.6.1954 அன்று நடைபெற்ற குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில்  காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காமராஜர் தமிழ்நாட்டில் 9 ஆண்டுகாலம் பொற்கால ஆட்சியை வழங்கினார். 

காமராஜர், தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் கல்வி மற்றும் தொழில் துறையில் பெரும் புரட்சி ஏற்படுத்தினார். இவர் காலத்தில் தொடங்கிய மதிய உணவுத் திட்டம் இன்று தமிழகம் கல்வியறிவில் சிறந்து விளங்க முக்கியக் காரணமாக உள்ளது. இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கு மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. மேலும் விவசாயம் மற்றும் தொழில் வளம் பெருகிட இந்த ஆட்சி உதவியது. தமிழக அரசியலில் மிக முக்கியமான கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி இக்காலத்தில் ஏற்பட்டதால் அரசியல் ஆர்வலர்கள், பெரும்பாலானவர்கள் கட்சி, கொள்கை வேறுபாடின்றி பாராட்டும் ‘பொற் கால ஆட்சி’ முக்கியக் கூறாக விளங்கியது.

அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தின் மூன்றாவது முதல்வராக 1954ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டுவரை என ஒன்பது ஆண்டுகளுக்கு பதவி வகித்த காமராஜர் ஆட்சி தமிழ்நாட்டின் பொற்கால ஆட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு. காமராஜ் முதல்வர் பதவியில் இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்கள்தான் இன்றுவரை தமிழகத்துக்கு வாழ்வாதாரத்தை வழங்கி வருகிறது. அவரது எளிமையான  வாழ்க்கை அரசியல் கட்சி தலைவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.

10.6.1954 அன்று நடைபெற்ற குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில்  காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காமராஜர், முன்னதாகவே 13-4-1954ல் மாநில முதல்வராக பதவி ஏற்றார். அதன்பிறகே தேர்லில் போட்டியிட்டு வெற்றிபெற்று, தனது முதல்வர் பதவியை நிரந்தரமாக்கினார். இன்று அவர் முதல்வராக பதவி ஏற்ற நாள்.