சென்னை

ன்று 06/04/2018) இயற்கை வேளாண் விஞ்ஞானி என அழக்கப்படும் நம்மாழ்வாரின் பிறந்த நாள் ஆகும்

தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை வேளாண் விஞ்ஞானிகளில் ஒருவரான நம்மாழ்வார் 20/04/1938 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள இளங்காடு என்னும் கிராமத்தில் பிறந்தவர்.    தனது வேளாண்மை இளங்கலைக் கல்வியை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கற்றுள்ளார்.  இவர் தந்தையார் பெயர் கோவிந்த சாமி.

நம்மாழ்வார் 1960 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் உள்ள மண்டல மழைப் பயிர் ஆய்வகத்தில் ஆய்வு உதவியாளராக பணியில் அமர்ந்தார்.   அங்கு எந்த ஒரு கள ஆய்வுப் பணியும் நிகழாததை எதிர்த்து பணியில் இருந்து வெளியேறினார்.  அதன் பின் 1963 முதல் 1969 வரை மண்டல விவசாய ஆய்வு நிலையத்தில் பணி புரிந்தார்.

அப்போது ஜப்பானிய விவசாயிகளில் ஒருவரும் சிந்தனையாளருமான மசனோபு என்பவரால் நம்மாழ்வார் ஈர்க்கப்பட்டார்.   அதன்  பிறகு இயற்கை வேளாண் விஞ்ஞானத்தில் பல ஆய்வுகளை துவக்கினார்.   தனது வாழ்நாள் முழுவதும் நம்மாழ்வார் இயற்கை முறை விவசாயத்தை பெரிதும் ஊக்குவித்தார்.   இயற்கை விவசாயம் குறித்து பல புத்தகங்கள் எழுதி உள்ளார்.

அத்துடன் மரபணு மாற்ற விவசாயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களில் நம்மாழ்வார் கலந்துக் கொண்டுள்ளார்.   அத்துடன் இயற்கை விஞ்ஞானத்துக்கு ஆதரவாக பல அமைப்புக்களை உருவாக்கி உள்ளார்.    விவசாய முன்னேற்றத்துக்காகவும் இயற்கை விவசாயத்தை பரப்பவும் பல முறை நடைபயணங்கள் மேற்கொண்டுள்ளார்.

கடந்த 2013 ஆம் வருடம் பட்டுக்கோட்ட மாவட்டம் அந்தி வெட்டி அருகே உள்ள பிச்சினிக்காடு என்னும் சிற்றூரில் மீத்தேன் வாயு எடுப்பதை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்.  அங்கு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.  அதனால் 2013 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி மரணம் அடைந்தார்.