இன்றைய முக்கிய செய்திகள்!

Must read

காவிரி பிரச்னை தொடர்பாக மத்திய அரசை கண்டித்தும் கர்நாடகா பாரதிய ஜனதா கட்சியையும் கண்டித்தும் ஈரோடு தலைமை தபால் அலுவலகம் முற்றுகையிட்ட தமிழ்புலிகள் கட்சியினர் 41 பேர் கைது.
கர்நாடக அரசை கண்டித்து திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் 16, 17 ம் தேதிகள் இரு தினங்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்.⁠⁠⁠⁠
ஆளுங்கட்சியும் அரசும் ஆதரவு தராமல் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடைபெற்ற முதல், முழு அடைப்பு போராட்டம் இதுதான்.  தமிழக மக்களின் ஒருமித்த உணர்வின்வெளிப்பாடு இது. காவிரிப்பிரச்சினையில் நியாயமான நிரந்தரத்தீர்வை அடைய,அரசியல் தளைகளைதாண்டி ஒற்றுமையுடன் தொடர்ந்துபயணிப்போம்…
1vignesh-live
காவிரிக்காக உயிர் நீத்த இளைஞர் விக்னேஷின் உடல் அஞ்சலிக்காக சென்னையில் வைக்கப்பட்டுள்ளது. வளசரவாகத்தில் நாம் தமிழர் கட்சியின் அலுவலத்தில் விக்னேஷ் உடல் வைக்கப்படுகிறது. அவரின் உடலுக்கு இன்று மாலை வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் உடல் அவரது சொந்த ஊரான மன்னார்குடிக்கு இன்று இரவு அல்லது நாளை காலை எடுத்துச்செல்லப்படுகிறது
ஜெ.,வுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு. முதல்வர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: இணயம் துறைமுகம், சாலை விரிவாக்கப்பணிகள் குறித்து முதல்வரை சந்தித்தேன். இணையம் துறைமுகத்தை ஆய்வு செய்ய ஒத்துழைப்பு அளிக்க கோரிக்கை விடுத்தேன். ஆய்வுக்கு ஒத்துழைப்பதாக முதல்வர் உறுதியளித்தார். காவிரி விவகாரத்தை முதல்வர் பொறுமையாக கையாண்டார் எனக்கூறினார்.
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் ஏற்பட்ட தீ விபத்தில் விளையாட்டு வீரர்களுக்கான துணி தயாரிப்பு நிறுவனம் முற்றிலாம் எரிந்து நாசமானது. பரணியப்பன் தெருவில் உள்ள அகமது என்பவருக்கு சொந்தமான தொழிற்ச்சாலையில் தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
சென்னை அண்ணா சாலையில் இன்று திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திக் கைதானார்கள்.
திமுக சார்பில் இன்று கட்சியின பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டனர்.
உள்ளாட்சித் தேர்தல் வரலாற்றில் முதல்முறை ஊராட்சிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு: குமரி மாவட்டத்தில் அறிமுகம். தமிழக உள்ளாட்சித் தேர்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக, ஊராட்சிப் பகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தும் முறை நிகழாண்டுஅறிமுகப்படுத்தப்படவுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சிகளில் மின்னணு இயந்திரங்கள் மூலம் வாக்குப் பதிவு நடைபெறும் என, மாநிலத் தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் தெரிவித்தார்.
ஒரு குடம் குடி தண்ணீர் ரூ.10க்கு வாங்கும் அவலம் : கடும் அவஸ்தையில் பொதுமக்கள். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது கஞ்சநாயக்கன்பட்டி கிராம ஊராட்சி பகுதிகளில் லாரிகள் மூலம் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு வாங்கும் நிலைக்கு இந்தப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி: பைனான்சியர் வெட்டி கொலை, லாஸ்பேட்டையில் பைனான்சியர் மணிகண்டன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். லாஸ்பேட்டை பகுதியில் மணிகண்டன் இருந்தபோது, 4 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டி சாய்த்துள்ளது. சந்தேகத்தின் பேரில் புஷ்பராஜ் என்பவரை லாஸ்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
ரஜினி மகள் விவாகரத்தா? ரஜினி – லதா தம்பதியின் இளைய மகள் சவுந்தர்யா. 2007ல், தந்தை ரஜினி நடித்த, கோச்சடையான் படத்தை தயாரித்தார்; அப்படம், தோல்வி அடைந்தது. அடுத்து தயாரித்த, கோவா படமும் வெற்றி பெறவில்லை.இதற்கிடையே, 2010ல், தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை, சவுந்தர்யா திருமணம் செய்தார். இந்நிலையில், நான்கு மாதங்களாக, அஸ்வின் – சவுந்தர்யா இடையிலான உறவில் கசப்பு ஏற்பட்டு, பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை, சேத்துப்பட்டில் தனியாக வசிக்கும் சவுந்தர்யா, விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக, சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இது தொடர்பாக, ரஜினி குடும்பத்தினர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை; அதேநேரத்தில், மறுக்கவும் இல்லை.
பெம்பா தீவில் கரை ஒதுங்கியது எம்.எச்.370 விமான பாகம். மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானம், கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி, மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு 239 பயணிகளுடன் புறப்பட்டு சென்றபோது நடுவானில் திடீரென மாயமானது. . அதில் பயணித்த 227 பயணிகளும், 12 சிப்பந்திகளும் மரணமடைந்துவிட்டதாக மலேசியா அரசு தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மத்திய கலால்வரித்துறை அலுவலகத்தை திமுகவினர் 3 ஆயிரம் பேர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை அலுவலகத்துக்குள் நுழைய முயன்றவர்கள் – போலீஸ் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
பொன்னேரியில் 500 வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம். கர்நாடக அரசை கண்டித்து பொன்னேரியில் 500 வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கர்நாடக அரசை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
பள்ளி மாணவியின் படத்தை மார்ஃபிங் செய்து, முகநூலில் ஆபாசமாக வெளியிட்டதாக, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
 
செப்டம்பர் மாத இறுதிக்குள் மௌலிவாக்கம் கட்டடம் இடிக்கப்படும்: தமிழக அரசுமௌலிவாக்கத்தில் இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டடத்துக்கு அருகில் உள்ள மற்றொரு கட்டடம் செப்டம்பர் மாத இறுதிக்குள் இடிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உலக அளவில் கடந்த 2015ம் ஆண்டு ஆண்டு 11,774 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில், 28,328 பேர் கொல்லப்பட்டனர், 35,320 பேர் காயமடைந்தனர். இதில், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானைத் தொடர்ந்து 43% தாக்குதல்கள் அதாவது 791 தாக்குதல்கள் நிகழ்ந்த இந்தியா 4வது இடத்தில் உள்ளது. நக்சலைட்டுகளால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 289 இந்தியர்கள் பலியாகியுள்ளனர்.
கவுகாத்தி: அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாற திட்டமிட்டுள்ளதால் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அருணாச்சல் முதல்வர் பெமா காண்டுவே ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கட்சி தாவ திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது
கர்நாடகா அரசை கண்டித்து சென்னையில் நேற்று நடந்த சீமான் பேரணியில் தீக்குளித்த திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவரணி பாசறை செயலாளர் விக்னேஷ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவிரியில் தமிழர்களின் உரிமையை வலியுறுத்தி உயிர் தியாகம் செய்துள்ளார் விக்னேஷ் : சீமான்
தற்கொலை மூலமாக போராடுவது சரியான வடிவமில்லை–சீமான்
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று தமிழகம், புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவிரி விவகாரத்தில் நடந்து வரும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில், தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
தமிழக பந்த் காரணமாக இரு மாநில எல்லைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.எந்த வாகனங்களையும் தமிழகத்திற்கு அனுமதிக்க விடாமல் கர்நாடக எல்லையில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து சென்னையில் தே.மு.தி.க.வினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இதைத் தெரிவித்த அவருடைய மனைவி பிரேமலதா உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்
உள்ளாட்சி தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் தேதி குறித்து இன்று அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் வட்டங்களை பிரித்து ஜமீன் கயத்தார் உட்பட 5 வருவாய் வட்டங்களை உருவாக்கி முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்
சேலத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்த வந்த விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் போலீசுக்கும் தள்ளுமுள்ளு
பிரதமரை ஜெயலலிதா சந்திக்க முயற்சி செய்தால் திமுக முழு ஒத்துழைப்பு –மு.க.ஸ்டாலின்
நஸ்ரத்பேட்டையில் உள்ள கல்லூரியின் தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் சுவாதி என்ற சித்த மருத்துவ மாணவி. அவர் டெல்லியைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது. தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்!
பெங்களூரு பிவிகே ஐயங்கார் சாலையில் உள்ள மின் பொருட்கள் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அனைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்காக அ.தி.மு.க.வில் 5 பேர் கொண்ட மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டது. இதை 14 பேர் கொண்ட குழுவாக மாற்றியுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலரும் முதல்வருமான ஜெயலலிதா. அமைச்சர்கள் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பர்கூர் என்றாலே பயம் ஏற்பட்டுவிடுகிறது. ஏனெனில் இந்த பர்கூர்தான் அவருக்கு வெற்றியையும் தோல்வியையும் கொடுத்த ஊர். அதனால்தான் இந்த ஊர் பக்கம் வர அவர் பயப்படுகிறார் — விஜயகாந்த்
கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தில் பேருந்து தீடீரென தீப்பிடித்து எரிந்ததில் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் இவ்விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
6 ஆண்டாக கடிதம் மட்டுமே எழுதும் ஜெயலலிதா பிரதமரை சந்திக்க வேண்டும் – ஸ்டாலின்
நாடு நாடாக பறந்து செல்லும் மோடி காவிரி பிரச்சனையை கண்டுகொள்ளவில்லை –இந்திய கம்யூ.,
பல்கலைக்கழக வளாகத்தில் “ராகிங்கை’ தடுக்கவும், பல்கலைக்கழகம், மாணவர்கள் குறித்த முழு விவரங்களை அறிந்து கொள்ளவும் புதிய செல்லிடப்பேசி செயலியை (ஆண்ட்ராய்ட்அப்ளிகேஷன்) அண்ணா பல்கலைக்கழகத்தின் கணிணி அறிவியல் துறை உருவாக்கி வருகிறது
சந்தனக் கடத்தல் வீரப்பன் வழிபட்ட கோட்டையூர் மாரியம்மன் கோயிலுக்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டது
தண்ணீருக்காக தனி ஆணையம், தனி கொள்கை உருவாக்கப்பட வேண்டும்– சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்
வேலூரில் கர்நாடகாவுக்கு ரயிலில் கடத்த முயன்ற, மூன்று டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை தள்ளுபடி செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தெரிவித்தார்
பெண்களைத் தொடர்ந்து சென்று தொல்லை கொடுப்பவர்களுக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் தண்டனை வழங்க வேண்டும்–ராமதாஸ
விழுப்புரத்தில் திமுக நகரச் செயலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை போலீஸார் பிடித்து தீவிர விசாரணை
தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜோக்கர் படத்தின் முதல் பாதி முழுவதும் தன் கருத்துக்களைப் பிரதிபலிப்பது போல் இருப்பதாகவும், ஆனால் அப்படத்தின் கிளைமாக்ஸில் தனக்கு உடன்பாடில்லை என்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி விமர்சித்துள்ளார்.
இயக்குநர் பிரியதர்ஷனுடனான திருமண வாழ்க்கை முடிவடைந்தது: நடிகை லிசி
மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனின் தலைமையில் எம்.பி.க்கள் குழு வரும் சனிக்கிழமை முதல் நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் பயங்கரவாதியான சைஃபுல்லா என்ற பகதூர் அலியின் நீதிமன்றக் காவலை அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ஆம் தேதி வரைநீட்டித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது
இந்திய வந்துள்ள நேபால் பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கு டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஷ்டிரபதி பவன் வந்த புஷ்ப கமல் தஹாலை பிரதமர் மோடி வரவேற்றார்.
உலக வங்கி தலைவராக உள்ள ஜிம் யோங் கிம், 2வது முறையாக அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவரும், எழுத்தாளருமான ஆபிரஹாம் வர்கீஸ், 2015-ஆம் ஆண்டுக்கான தேசிய மனிதநேயப் பதக்கத்துக்குத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

More articles

Latest article