சென்னை

ன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தேவையின்றி வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மற்றும் அதன் உருமாறிய திரிபான ஒமிக்ரான் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதையொட்டி தமிழக அரசு கடந்த 6 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அறிவித்துள்ளது.   மேலும் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலானது.   இது வரும் 31 ஆம் தேதி வரை தொடர உள்ளது.

அவ்வகையில் இன்று இரண்டாம் முறையாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலாகிறது.   தமிழகம் எங்கும் காய்கறி,  மளிகைக் கடைகள், வணிக நிறுவனங்கள் திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளன.  உணவு விடுதிகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

அதே வேளையில் புறநகர் மின்சார ரயில்கள் குறைந்த எண்ணிக்கையில் இயங்க உள்ளது.   ரயில் மற்றும் விமானப்பணிகள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இதற்கு காவல்துறையினரிடம் பயணச் சீட்டை அவசியம் காட்ட வேண்டும்.   சுமார் 60000 காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாநிலம் எங்கு அத்தியாவசிய தேவைகள் தவிர மற்றவைகளுக்கு மக்கள் வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  காவல்துறையினர் தடையை மீறி வெளியே சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்களில் செல்வோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிகை விடுத்துள்ளனர்.