சென்னை

ன்று முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செய்யப்படுகிறது.

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (வயது 45). தனது உதவியாளர் கோபிநாத்துடன் (35) இமாச்சலப்பிரதேசத்துக்கு இவர் சுற்றுலா சென்றார். கடந்த 4-ந் தேதி மலைப்பகுதியில் இவர்கள் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து, சட்லஜ் நதியில் விழுந்தது. ஓட்டுநர் தஞ்ஜின் உயிரிழந்து கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.

வெற்றியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்  சட்லஜ் நதியில் 6 கி.மீ. தொலைவில் பாறைக்கு அடியில் வெற்றியின் உடலை உள்ளூர் நீச்சல் வீரர்கள் கண்டுபிடித்து நேற்று பகலில் மீட்டனர். சுமார் 8 நாட்களுக்குப் பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவலை இமாச்சலப்பிரதேச காவல்துறை துணை ஆணையர் அமித் ஷர்மா வெளியிட்டார்.

வெற்றியின் உடல் பிரேத பரிசோதனைக்காகச் சிம்லா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று மாலை வெற்றியின் உடல், ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்படுகிறது.  ,இன்று மாலை 5 மணிக்கு வெற்றி துரைசாமியின் உடல் சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.  மாலை 6 மணியளவில் கண்ணம்மா பேட்டை  மயான பூமியில் தகனம் செய்யப்படுகிறது.