சென்னை

மிழக அரசு 4000 பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகப் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

நேற்றைய தமிழக சட்டப்பேரவை கூட்டம் நிறைவுக்குப் பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம்  திமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்கவில்லை என கூறினார்.  போக்குவாரது துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை செயலகத்தில் அதற்கு பதில் அளித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம்,

”முதல்வர் மு க ஸ்டாலின் சமீபத்தில் 100 புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்தார். ஏற்கனவே உள்ள 99 புதிய பேருந்துகளுடன் இப்போது 199 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மேலும் 4 ஆயிரம் பேருந்துகளை வாங்குவதற்கான டெண்டர் விடப்பட்டு, விரைவில் அவை வாங்கப்பட உள்ளன. தமிழக அரசு நிதியில் 2 ஆயிரம் பேருந்துகளை வாங்குவதற்கான பணியும், ஜெர்மன் வங்கி நிதி உதவியில் 2 ஆயிரம் பேருந்துகளை வாங்குவதற்கான நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 100 மின்சார பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. புதிய பேருந்துகள் கொரோனா காலத்தில் தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தால் வாங்க முடியாத நிலை இருந்தது. முந்தைய தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது 15 ஆயிரம் பேருந்துகள் வாங்கப்பட்டன. பின்பு ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் 10 ஆயிரம் பேருந்துகள் வாங்கப்பட்டன. ஆனால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலத்தில் வெறும் 3 ஆயிரம் பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே சிறந்த பேருந்து நிலையமாக கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வருவதற்குத் தயாராக இருந்தால் நானும், அமைச்சர் சேகர்பாபுவும், அங்கு என்னென்ன வசதிகள் உள்ளன? என்பதை அவருக்குக் காட்ட தயாராக இருக்கிறோம்.  இன்றும் 300-க்கும் மேற்பட்ட ஆம்னி எதிர்க்கட்சித் தலைவர் கள் இன்றும் கிளாம்பாக்கம் எதிர்க்கட்சி தலைவர் முனையத்திலிருந்துதான் இயக்கப்படுகின்றன. தற்போது கிளாம்பாக்கம் பேருந்து தலைவர் நிலையம் முழுமையாகச் செயல்பாட்டில் உள்ளது.”

என்று தெரிவித்துள்ளார்.