ஐதராபாத்
தெலுங்கானா மாநில தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
தற்போது சட்டசபைத் தேர்தல் நடந்து வரும் 5 மாநிலங்களில் கடைசி மாநிலமாக, தெலுங்கானாவில் வருகிற 30 ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. கடந்த 2 முறையாக இங்கு ஆட்சியைப் பிடித்த பாரதிய ராஷ்டிர சமிதி, அங்கு ஹாட்ரிக் வெற்றிக்காகப் போராடி வருகிறது.
பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் தெலங்கானாவில் வெற்றி பெற அயராது உழைத்து வருகின்றன. எனவே இம்மாநிலத்தில் மும்முனை போட்டி ஏற்பட்டு இருக்கிறது.
இன்று மாலை 6 மணியுடன் தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் நிறைவு அடைகிறது.. ஆகவே தலைவர்கள் அனைவரும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தற்போது பாரதிய ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமின்றி மேலும் பல்வேறு தலைவர்களும் மாநிலம் முழுவதும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளதால் தெலங்கானா தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.