டில்லி

த்திய தேர்தல் ஆணையம் இன்று காலை 11 மணிக்கு கர்நாடக சட்டசபை தேர்தல் தேதிகளை அறிவிக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன

கர்நாடக மாநிலத்தில் சட்டசபையின் ஆயுள் முடிவடையும் நிலையில் உள்ளது.  மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான பரப்புரைகளை காங்கிரஸ் மற்றும் பாஜக தொடங்கி விட்டன.

இந்நிலையில் மத்திய தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   அதில் இன்று காலை 11 மணிக்கு கர்நாடக மாநில சட்டப்பேரவையின் தேர்தல் அட்டவணை வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின் காவிரி ஆணையம் சட்டப்படி அமைக்க முடியாது எனவும்  அதனால்தான் மோடி அரசு தேர்தல் தேதிகளை அறிவிப்பதில் மும்முரமாக உள்ளது எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.