டிசம்பர் 3ந்தேதி தமிழக அரசியலில் மறக்க முடியாத நாள். மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் என்று பரபரப்பாக கூறி தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ரஜினி, ஏமாத்துவோம் தமிழக மக்களை ஏமாத்துவோம்… என்பதை உறுதி செய்து, தமிழக மக்கள் ஏமாற்றிய தினம் இன்று.
அரசியலுக்கு வந்து தமிழக மக்களுக்கு நல்லது செய்யப்போவதாக பல ஆண்டு களுக்கு முன்பே தெரிவித்து, 70வயது படங்களில் நடித்து, தனது மொக்கைப் படங்களையும் வெற்றிப்படங்களாக மாற்றி, கல்லா கட்டிய ரஜினி, மக்களை ஏமாற்றும் வகையில், கட்சியை தொடங்கப்போவதாக அறிவித்து, அதற்கு ஒருங்கிணைப்பாளரை அறிவித்த தினம் இன்று.
தனது தனித்துவமான ஸ்டாலால் தமிழக மக்களிடையே சூப்பர் ஸ்டாராக வளர்ந்தவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழக சினி உலகில், எம்.ஜி.ஆருக்கு, தனது ஸ்டைல் மூலம் மக்களை கவர்ந்தவர் ரஜினி என்றால் மிகையில்லை. மேலும், அவரது பேச்சு, நடவடிக்கை, ஆன்மிகம், எதையும் தயங்கா மல் தெரிவிக்கும் பண்பு, அரசியல் கட்சிகள் மீதான விமர்சனம் போன்றவை மக்களிடையே அவர்மீதான மதிப்பை பெருமளவுக்கு உயர்த்தியது. இதனால் அவர்மீது லட்சக்கணக்கான ரசிகர்கள் வெறித்தனமாக இருந்து வந்தனர்.
ரஜினி கட்சியின் பெயர் ‘மக்கள் சேவை கட்சி’, சின்னம் ‘ஆட்டோ’! தேர்தல் ஆணையத்தில் பதிவு…..
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய ரஜினி, ஆரம்ப காலத்தில் ரஜினி ரசிகர் மன்றம் அமைத்து வந்த நிலையில், பின்னர் அதை மக்கள் மன்றமாக மாற்றி மக்களுக்கு சேவை செய்யப்பபோவதாக தெரிவித்ததுடன், தமிழக மக்களுக்கு நல்லதை செய்ய, அரசியலுக்கு வர விருப்பம் இருப்பதாகவும் கொளுத்தி போட்டார். இதனால், அவரது ரசிகர்கள் ரஜினிதான் அடுத்த முதல்வர் என துள்ளாட்டம் போட்டனர். ஆனால், ரஜினியோ, தனது ஒவ்வொரு படத்தின் ரிலீசின்போது, இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு தனது ரசிகர் மன்றத்தினரை உசுப்பேத்தி, உசுப்பேத்தி தனது மொக்கை படங்களையும் வெற்றிப்படமாக்கி கோடி கோடியாக சம்பாதித்தார்.
இந்த நிலையில்தான், தமிழக அரசியலில் முதுபெரும் தலைவர்களான முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பிறகு, தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக கூறியதுடன், அதை நிரப்பப்போவதாகவும் கூறி, அரசியல் அச்சாரம் போட்டார். தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் அரசியல் கட்சி குறித்து தனது ரசிகர் மன்றத்தினரிடையே கூறியதுடன், அதுகுறித்து டிசம்பர் 3ந்தேதி அறிவிப்பதாக கூறினார். தொடர் கட்சியை அறிவித்தவர், தனது கட்சியில், கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு வேறு தலைமை, இதுதான் தனது கொள்கை என்று தெரிவித்து வித்தியாசமான கருத்தை முன்வைத்தார்.
அதன்படி, டிசம்பர் 3ந்தேதி செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, அரசியலில் குதிக்கப்போவதாக கூறியவர், தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்றும் தெரிவித்ததுடன், வரும் 31ந்தேதி கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்தார். மேலும், ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பவரையும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் அறிமுகப்படுத்தினார்.
இதில் குறிப்பிடும்படியாக சொல்ல வேண்டுமென்றால், அர்ஜுன மூர்த்தி என்பவர், பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்தவர். அவரை தன்வசப்படுத்தி, பாஜகவில் இருந்து விலக வைத்தார்.
இதுதொடர்பாக ரஜினி தனது டிவிட்டர் பக்கத்தில், “ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பர் 31ல் அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என்று ஹேஷ் டேக்குடன் குறிப்பிட்டிருந்தார். மேலும், வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதிசயம் நிகழும்” என்று தெரிவித்திருந்தார்.
பின்னர் தனது அரசியல் கட்சி குறித்து விவரித்தவர், “2017 டிசம்பர் 31 ஆம் தேதியே நான் அரசியலுக்கு வருவதாக கூறியிருந்தேன். கொடுத்த வாக்கில் நான் பின்வாங்க மாட்டேன். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று கூறினேன். மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை உண்டாக்க வேண்டும் என்றும் கூறியிருந்தேன். எழுச்சியை உண்டாக்கிய பின்னர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைத்தேன்.
ஆனால், கொரோனா காலத்தில் அது முடியவில்லை. மக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் அது உங்களுக்கு பெரிய ஆபத்து என்று மருத்துவர்கள் கூறினார்கள்.
ரஜினி ஏழேழு ஜென்மத்திற்கும் கட்சி தொடங்க மாட்டார்! நாஞ்சில் சம்பத் ‘பரபர’ தகவல்…
நான் உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூருக்கு சென்று உயிர் பிழைத்து வந்தது தமிழக மக்களிடன் பிரார்த்தனையால்தான். எனவே, இப்போது தமிழ் மக்களுக்காக என் உயிரே போனாலும்கூட என்னைவிட சந்தோசப்படும் நபர் யாராகவும் இருக்க முடியாது.
அரசியல் மாற்றம் காலத்தின் கட்டாயம். காலத்தின் தேவை. எல்லாவற்றையும் மாற்றம் வேண்டும். இதில் நான் ஒரு சின்ன கருவி. மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மாற்றம் நடக்க வேண்டும்.
வெற்றி அடைந்தாலும் அது மக்களுடைய வெற்றி; தோல்வி அடைந்தாலும் அது மக்களுடைய தோல்வி. இந்த மாற்றத்துக்கு மக்கள் அனைவரும் எனக்கு துணை நிற்க வேண்டும் என்று கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன் என்று அறிவித்தார்.
ஆனால் நடந்தோ வேறு… தனது 70வயது வரை கோடி கோடியாக தமிழக மக்களிடன் ரத்தத்தை உறிஞ்சு கல்லா கட்டிய ரஜினி, இறுதியில் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்து தமிழக மக்களுக்கு அல்வா கொடுத்துவிட்டார்.