சென்னை: சபரிமலை அய்யப்பனுக்கு இருமுடி கட்டும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, பக்தர்கள் கோவிலுக்கு எடுத்துச்செல்லும்  தேங்காயில் அமைச்சர் மஸ்தான் நெய் ஊற்றிய காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் கார்த்திகை 1 ஆம் தேதியான நாளை முதல் மாலை அணிந்து விரதம் துவங்குவது வழக்கம். அதன்படி தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோர் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு இருமுடி கட்டி,  சபரிமலை சென்று, அய்யப்பனை தரிசித்து வருகின்றனர்.

ஐயப்பன் வழிபாட்டில் இருமுடி மிகவும் புனிதமானது.  . தனது உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக்கி மனம் உருகி ஐயப்பனை வேண்டும் பக்தர்கள், அய்யனின் திருமேனி அபிஷேகத்துக்கு நெய்யையும்,  பூஜை ஜை பொருட்களையும் கட்டி சுமந்து செல்வது தான் இருமுடி. இருமுடியை கோவிலில் வைத்தும் கட்டலாம். வீடுகளில் வைத்தும் கட்டலாம். இதை 18வருடங்கள் தொடர்ந்து சபரிமலைக்கு சென்றுவந்த குருசாமி எனப்படும் அய்யப்ப பக்தர் வந்துதான் மற்ற பக்தர்களுக்கு இருமுட்டி கட்டுவார். அப்போது, இருமுடி கட்டும் பக்தர் குருசாமியின் அருகில் ஐயப்பன் படத்திற்கு முன்பு அமர்ந்து இருக்க வேண்டும். தேங்காயில் நெய்நிறைக்க தொடங்கும் போது நமது பிரார்த்தனைகளோடு சாமியே சரணம் என்றபடி தேங்காயில் நெய்யை நிறைக்க வேண்டும்.  நெய் நிறைந்ததும் அதை மூடி சந்தனம், குங்குமம் பு+சி ஒரு சிறிய பையில் வைப்பார்கள். அதற்குள் காணிக்கை பணமும், அன்னதானத்துக்கு சிறிதளவு அரிசியும் வைக்கப்பட்டு இருக்கும். வீட்டில் யாராவது நெய் நிறைக்க விரும்பினால் அவர்களும் நெய் நிறைத்து கொள்ளலாம்.

இதுபோல அய்யப்பக்தர்கள் இருமுடி கட்டும் நிகழ்ச்சியில், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், பக்தர்களின் இருமுடி நெய்தேங்காயில், நெய் ஊற்றினார்.

அமைச்சரின் சமய வேறுபாடற்ற செயல் பக்தர்களியே பெரும் வரவேற்பை பெற்றது.  சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுதான் நாம் வளர்ந்த இந்தியா, இப்படித்தான் இருக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.