சென்னை
இன்று காங்கிரஸ் கட்சி தனது தமிழக வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது.
அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இதுவரை காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநிலங்களில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன
இங்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பற்றிய ய உத்தேச பட்டியலை மாநில காங்கிரஸ் குழு தயார் செய்த அதனை மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று முன்தினம் டெல்லிக்கு எடுத்துச் சென்றார்.
இதையொட்டி கட்சியின் அகில இந்திய அலுவலகத்தில் நேற்று மாலை, மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு பற்றிய பரிசீலனை மீண்டும் நடைபெற்றது. தமிழகம் மட்டுமின்றி வேறு பல மாநிலங்களுக்கும் பரிசீலனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு, ஓரளவு இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இறுதி முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம்.
”இன்று காலை 10 மணிக்கு மீண்டும் வேட்பாளர் தேர்வு தொடர்பாகக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் இறுதி செய்த வேட்பாளர்களை அறிவிப்போம். மக்களை நம்பி இருக்கும் அரசியல் இயக்கங்கள் வேறு. எந்திரங்களை நம்பி இருக்கும் அரசியல் இயக்கங்கள் வேறு. நாங்கள் மக்களை நம்பி நிற்கிறோம்”.
என்று கூறினார்.