சென்னை

ன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பீகார் செல்கிறார்.

வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார்.  இதையொட்டி பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நாளை (23-ந் தேதி) நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பங்கேற்க வேண்டும் என்று நிதிஷ்குமார் கேட்டு கொண்டார்.  எனவே இந்த கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாக நேற்று முன்தினம் நடைபெற்ற ‘கலைஞர் கோட்டம்’ திறப்பு விழாவில் அறிவித்தார்.

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பீகார் செல்கிறார். மாலை 5.30 மணிக்குச் சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாட்னா செல்ல உள்ளார். அவர் நாளை நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

நாளை இரவு அங்கிருந்து சென்னை திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கூட்டத்தில் எந்தெந்த எதிர்க் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்பது குறித்த இன்று மாலை தெரிய வரும் எனக் கூறப்படுகிறது.