சென்னை

ன்று ’மீண்டும் மஞ்சப்பை’ பரப்புரை மற்றும் அதற்கான கண்காட்சியில் முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

 

மாசு கட்டுப்பாட்டு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையில், “பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைத் தவிர்க்கும் விழிப்புணர்வையும் அதற்கு மாற்றான துணிப் பைகளையும் உபயோகிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே ‘‘மீண்டும் மஞ்சப்பை” பரப்புரையின் நோக்கம் ஆகும்.

 

 

தமிழக அரசின் “மீண்டும் மஞ்சப்பை” பரப்புரைக்கான நிகழ்ச்சி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு 23ம் தேதி (இன்று), தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்படுகிறது. இந்நிகழ்வில் மாநிலத்தின் முக்கிய பிரமுகர்கள் பங்கு பெறுகின்றனர்.

 

இந்நிகழ்வில் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப்பொருட்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் விளக்கப்படக் கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காக வாலாஜா சாலையில் அமைந்துள்ள “கலைவாணர் அரங்கத்தில்” வைக்கப்பட உள்ளது.  இன்று மாலை 7 மணி வரை நடைபெறும் கண்காட்சியைப் பொதுமக்கள் கண்டுகளித்து அதனை தங்களுடைய வாழ்விலும் உபயோகித்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும்.” எனக் கூறப்பட்டுள்ளது.