சென்னை

ன்று அயோத்திதாச பண்டிதர் மணி மண்டபத்தை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தமிழக அரசின் சார்பில் திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதரின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில்,, அயோத்திதாசப் பண்டிதரின் 175-வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவின் நினைவாக ரூ.2 கோடியே 49 லட்சம் மதிப்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அயோத்திதாசப் பண்டிதரின் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது.

இன்று காலை 10.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மணிமண்டபத்தைத் திறந்து வைக்கிறார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.