சென்னை’

ன்று தமிழக முதல்வர் மு க் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 

கடந்த 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் ரூ.6 லட்சத்து 64 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.  இதையொட்டி 23-ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவை அறையில் 23-ந் தேதி காலை 11 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருள்கள் குறித்த விவரம் தனியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இன்றுகாலை 11 மணிக்குச் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. வரும 28 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Today, TN, cabinet meeting, CM Stalin,