சென்னை

ன்று காலை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாவலர் நெடுஞ்செழியன் சிலையைத் திறந்து வைக்கிறார்.

திமுக மூத்த தலைவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான நெடுஞ்செழியனை மக்கள் நாவலர் நெடுஞ்செழியன் என அழைக்கின்றனர்.    அவருக்கு இன்றுடன் 100 வயது நிறைவடைகிறது.   தமிழக அரசு சென்னை சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் ஒரு சிலை அமைத்துள்ளது.  இன்று காலை தமிழக முதல்வர் மு க் ஸ்டாலின் அந்த சிலையைத் திறந்து வைக்க உள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நாவலர் இரா. நெடுஞ்செழியன், 1967 முதல் 1969 வரை அண்ணா ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சராகவும், 1971 முதல் 1975 வரையில் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சராகவும் சிறப்பாகப் பணியாற்றினார். பின்னர் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு உணவு, நிதித் துறைகளின் அமைச்சராகத் திறம்படச் செயலாற்றினார். வாழ்நாள் வரையில், பகுத்தறிவுக் கொள்கையை உயிர்போல காத்து வந்தவர்.

முதல்வர் ஸ்டாலின், “திராவிட இயக்கத்தின் சொல்லோவியம், நடமாடும் பல்கலைக்கழகம் நாவலரின் நூற்றாண்டு நிறைவு விழாவை அறிவு சார்ந்த தமிழ் உலகமும், திராவிட இயக்கத்தின் தொண்டர்களும் கொண்டாடி மகிழ்வோம்’’ என அறிவித்தார். மேலும், கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நாவலர் நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கம் புதிய விருந்தினர் மாளிகையில் சிலை அமைக்கப்படும் “என அறிவித்தார்.

அதன்படி, இரா. நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10 மணி அளவில் திறந்து வைத்துச் சிறப்பிக்க உள்ளார்.”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.