சென்னை
இன்று மெட்ரோ ரயில் சேவை நேரம் சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,
”விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. எனவே சென்னையிலிருந்து முன்கூட்டியே சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவையில் இன்று ஒருநாள் மாற்றம் செய்யப்படுகிறது.
இரவு நேரத்தில் புறப்படும் கடைசி ரயில் சேவை 10 மணியாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி நெரிசல் மிகு நேரங்களில் இரவு 8 -10 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் 9 நிமிடம் என்பதற்குப் பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
பயணிகள் போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது ”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]