சென்னை

ன்று இரவு 7.20 மணிக்குச் சென்னையில் இருந்து புறப்படும்  ஹவுரா ரயீல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

நேற்று முன் தினம் இரவு ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் 3  ரயில்கள் மோதி மாபெரும் விபத்து ஏற்பட்டது.  இதில் சுமார் 300 பேர் உயிரிழந்து 1000க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.  இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இன்று தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”

“சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிறு (ஜூன் 4) இரவு 7.20 மணிக்குப் புறப்பட வேண்டிய சென்னை-ஹவுரா ரயில் ரத்து செய்யப்படுகிறது. மேலும், எஸ்எம்விடி பெங்களூரு – ஜசித் (22305) வாராந்திர அதிவிரைவு ரயில் பெங்களூரிலிருந்து காலை 10 மணிக்குப் பதிலாக, பகல் 12.30 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

அதேபோல், காலை 10.35 மணிக்குப் புறப்படும் பெங்களூருவிலிருந்து புறப்படும் எஸ்எம்விடி பெங்களூரு – ஹவுரா (12864) ரயில் பகல் 1 மணிக்குப் புறப்படும். எஸ்எம்விடி பெங்களூரு – ஹவுரா துரந்தோ விரைவு ரயில் (12246) பெங்களூரூவிலிருந்து காலை 11.20 மணிக்குப் பதிலாக பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்”

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.