சென்னை

ன்று காலை உயர்நீதிமன்றத்தில் ஆர்ம்ஸ்டிராங் உடல்  கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்வது குறித்து விசாரணை நடைபெற உள்ளது.

கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி வக்கீல் பொற்கொடி தரப்பில் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி ஆணையர் இந்த மனு தொடர்பாக மாநகராட்சி கமிஷனர், எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே இந்த கோரிக்கை தொடர்பாக அவசரமாக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொற்கொடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது.

பொறுப்பு தலைமை நீதிபதி இந்த மனுவை தனி நீதிபதி ஒருவர் விசாரிக்க உத்தரவிட்டார்.  இந்த வழக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு காணொலி மூலம் விசாரிக்கப்பட உள்ளது. வழக்கை விசாரிக்கும் தனி நீதிபதி யார்? என்பதை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் முடிவு செய்து அறிவிப்பார் என கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]