சென்னை
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் இன்றும் பொதுமக்கள் இலவசமாக மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரெயிலின் டி எம் எஸ் – வண்ணாரப்பேட்டை இடையிலான சேவை கடந்த 10 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதனால் நேற்று இரவு வரை பொது மக்கள் மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயனம் செய்யலாம் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில் நேற்று மதியம் 12 மணி வரை சைதாப்பேட்டை மற்றும் சின்னமலை இடையே உயர் மின் அழுத்த கம்பியில் பழுது ஏற்பட்டது. அதனால் மெட்ரோ ரெயில் நிறுத்தப்பட்டு அதன் பிறகு மீண்டும் சேவை தொடங்கப்பட்டது. நேற்று இரவு வரை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெட்ரோ ரெயிலில் இலவசப் பயணம் செய்துள்ளனர்.
மெட்ரோ ரெயில் நிர்வாகம் இன்றும் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் பொதுமக்களின் ஆர்வத்தை முன்னிட்டும் மெட்ரோ ரெயில் குறித்த விழிப்புணர்வை அதிகப் படுத்தவும் மூன்றாம் நாளாக இன்று இலவச சேவை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]