சென்னை

டுத்தடுத்து வந்த லஞ்சப்புகாரை ஒட்டி சென்னை டாஸ்மாக் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரூ.2.4 லட்சம் ரொக்கத்தை கைப்பற்றி உள்ளனர்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள எல் எல் ஏ கட்டிடத்தில் சென்னை டாஸ்மாக் மண்டல முதுநிலை மேலாளர் அலுவலகம் இயங்கி வருகிறது கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதுநிலை மேலாளர் குணசேகரன் பணி மாறுதலுக்காக ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாரால் பிடிக்கப்பட்டார். அதன் பின்னர் அந்த பதவிக்கு முத்துகுமாரசாமி நியமிக்கப்பட்டார்.

முத்துசாமி மீது அடிக்கடி லஞ்சப் புகார் வந்த வண்ணம் இருந்தது. அவர் பணி மாற்றம், பணி நியமனம், பார்களுக்கு ஒப்பந்தம் அளிப்பது போன்ற பல்வேறு பணிகளுக்கு பெருமளவு லஞ்சம் வாங்குவதாக அந்த புகார்கள் தெரிவித்தன. அதை ஒட்டி நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் லஞ்ச ஒழுப்பு காவல்துறையினர் இந்த அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

துணை சூப்பிரண்ட் அதிகாரி சங்கர் தலைமையில் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனியில் முத்துக் குமாரசாமி அலுவலகத்தில் ரொக்கமாக ரூ.2.4 லட்சம் சிக்கி உள்ளது. அதற்கான விவரங்களை அவரால் கூற முடியாததால் அது லஞ்சப்பணம் என காவல்துறை முடிவு செய்துள்ளது. நேற்று இரவு 7 மணிக்கு சோதனை முடிவடைந்தது. விசாரணை இன்னும் தொடர்ந்து வருகிறது.