கமதாபாத்

ன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியுடன் ஆப்கானிஸ்தான் அணி மோதுகிறது. 

இந்தியாவில் 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.  இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.  மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

இன்று இந்த தொடரில் நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா ஏற்கனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது. எனவே ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவைத் தோல்வி அடையச் செய்ய வேண்டும்.

அப்படிச் செய்தால் ஆப்கானிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இருக்கும். ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தால் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு முடிந்துவிடும். இன்று இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 2 மணிக்கு தொடங்க உள்ளது.