பெங்களூரு

ன்று சூரியனை ஆய்வு செய்த ஏவப்பட்ட இந்திய விண்கலம் ஆதித்யா எல் 1 தனது இறுதி சுற்றுப்பாதையை அடைய உள்ள்து.

கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி அன்று சூரியனை ஆய்வு செய்வதற்காக, ‘ஆதித்யா-எல்1’  விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம்  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்டு 63 நிமிடங்கள் மற்றும் 20 வினாடிகளில், நீள்வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

பிறகு அந்த விண்கலம் சூரியனை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அதன் பயணத்தைக் கண்காணித்து வருகிறது.  இன்று, ‘ஆதித்யா-எல்1’ விண்கலம் இன்று அதன் இறுதி இருப்பிட சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.

‘இஸ்ரோ’ அதிகாரிகள் இது குறித்து

“இன்று மாலை சுமார் 4 மணிக்கு ஆதித்யா-எல்1′ விண்கலம், இ அதன் இறுதி இருப்பிடமான லாக்ராஞ்ச் பாயிண்ட் 1-ஐ சுற்றியுள்ள ‘ஹாலோ’ சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும். இது பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது. 

எந்த கிரகணமும் குறுக்கிடாமல் சூரியனைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் வகையில் வசதியான  அந்த இடத்தில் இருந்து சூரியனின் செயல்பாடுகளையும், விண்வெளி வானிலையில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் ஆய்வு செய்யப்படும். ஆய்வில்  விண்கலத்தில் உள்ள 7 சாதனங்கள் ஈடுபடும். விண்கலத்தை அந்த இடத்தில் நிலைநிறுத்தாவிட்டால், அது தொடர்ந்து பயணிக்கும். சூரியனை நோக்கிச் செல்லக்கூடும்.” 

என்று தெரிவித்துள்ளனர்.