கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 9,798, கேரளா மாநிலத்தில் 11,361 பேர் பாதிப்பு

Must read

மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 9.798 மற்றும் கேரளா மாநிலத்தில் 11,361 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 9,798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 59,54,508 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 198 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,34,747 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 14,347 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 56,99,983 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,34,747 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 11,361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 27,85,305 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 90 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 13,834 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 12,147 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 26,65,354 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,07,681 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

 

More articles

Latest article