சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்றுக்கு இன்று ஒருவர் மட்டுமே பலியான நிலையில், புதியதாக 76 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

பொதுவாக கொரோனா குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அல்லது செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவிப்பதார்.  ஆனால், இன்று ஒருவரும் செய்தியாளர்களை சந்திக்காத நிலையில், மாநில அரசு சார்பில் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

அதில்,  தமிழகத்தில் புதிதாக 76 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,596 ஆக உயர்ந்துள்ளது.

இன்று நோய்த் தொற்றால் ஒருவர் பலியாகியிருப்பதன்மூலம், மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளையில், இன்று ஒரேநாளில் 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 635 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சீனாவில் இருந்து வாங்கப்பட்ட  ரேபிட் டெஸ்ட் கிட் மூலம்  செய்யும் கொரோனா சோதனைகள் பல தவறுதலாக உள்ளது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அதை உபயோகப்படுத்த ஐசிஎம்ஆர் தடை விதித்துள்ளது.

தமிழகஅரசு நேரடியாகவே சீனாவில் இருந்து ரேபிட்கிட் கொள்முதல் செய்துள்ளது. பொதுவாகவே சீனப் பொருட்கள், கொரியன் பொருட்கள்  என்றாலே போலி என்ற எண்ணம் மக்களிடையே நிலவி வருகிறது.

இந்த நிலையில், கொரோனா கிட் மற்றும் அதன் சோதனை  குறித்து, செய்தியாளர்கள் கேள்வி எழுப்புவார்களோ என்ற பயத்தில், சுகாதாரத்துறை அமைச்சரோ, தலைமைச் செயலாளரோ, சுகாதாரத்துறைச் செயலாளரோ செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்று கோட்டை வட்டாரத் தகவல்கள் பரவி வருகின்றன..