சென்னை

மிழகத்தில் இன்று 739 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,44,642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,03,897 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,70,27,644 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 739 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிநாட்டில் இருந்து 5 பேர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 6 பேர் வந்துள்ளனர்.   இதுவரை 27,46,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,758 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 614 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 27,02,588 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 6,654 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 294 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,62,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 3 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,651 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 126 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,51,668 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,689 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 78 உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,53,226 பேர் பாதிக்கப்பட்டு 2,509 பேர் உயிர் இழந்து 2,49,755 பேர் குணம் அடைந்து தற்போது 962 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,75,295 பேர் பாதிக்கப்பட்டு 2,547 பேர் உயிர் இழந்து 1,72,237 பேர் குணம் அடைந்து தற்போது 511 பேர் சிகிச்சையில் உள்ளனர்.