மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 7,241 மற்றும் கேரளா மாநிலத்தில் 13,750 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 7,241 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 61,96,498 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 140 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,26,396 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 12,396 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 59,64,588 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,01,900 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 13,750 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 31,30,833 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 130 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 15,165 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 10,697 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 29,93,242 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,21,941 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.