விஜயவாடா

ன்று கர்நாடகாவில் 5,783 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 6,341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 5,783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 27,96,121 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 168 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 33,602 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 15,290 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 26,25,447 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,37,050 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம், இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 6,341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 18,39,243 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 57 பேர் உயிர் இழந்து இதுவரை 12,224 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 8,486 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 17,59,390 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 67,629 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.