விஜயவாடா

ன்று கர்நாடகாவில் 4,517 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 5,446 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 4,517 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 28,06,453 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 120 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 33,883 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 8,456 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 26,45,735 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,05,940 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம், இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 18,50,563 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 50 பேர் உயிர் இழந்து இதுவரை 12,319 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 7,772 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 17,75,176 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 63,068 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.