கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு

Must read

மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 39,922. மற்றும் மேற்கு வங்கத்தில் 20,846 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 39,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 53,09,215 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 695 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 79,552 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 53,249 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 47,07,980 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 5,19,254 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

மேற்கு வங்கத்தில் இன்று 20,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 10,94,802 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 136 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,993 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 19,131 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,50,017 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,31,792 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மேற்கு வங்கம் எட்டாம் இடத்தில் உள்ளது.

 

More articles

Latest article