தமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்

Must read

சென்னை

கொரோனா ஊரடங்கில் நாளை முதல் புதிய கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  கடந்த 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.   அதில் பொதுமக்கள் நன்மைக்காகப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.   இதனால் ஊரடங்கை எளிதாக எடுத்துக் கொண்டு பலரும் ஊரைச் சுற்றத் தொடங்கினர்.

நேற்று ,முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கு விதிகளை மேலும் கடுமையாக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.   அதையொட்டி நாளை முதல் புதிய கூடுதல் கட்டுப்பாடுகள் அமலாகின்றன.  அவை பின் வருமாறு

  • மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள், கலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி
  • தேநீர் கடைகளுக்கு அனுமதி கிடையாது
  • காய்கறி, பூ பழம் ஆகியவற்றை விற்கும் நடைபாதை கடைகளுக்கு அனுமதி கிடையாது.
  • வரும் 17ஆம் தேதி காலை 6 மணி முதல் மாவட்டங்களுக்குள்ளும் மாவட்டங்களுக்கு இடையேயும் பயணிக்க இ பதிவு முறை கட்டாயம் ஆக்கப்படுகிறது.
  • மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மின் வணிக நிறுவனங்கள் இயங்க அனுமதி
  • பெட்ரோல் பங்குகள், ஏடிஎம் போன்றவை வழக்கம் போல் செயல்படும்

More articles

Latest article