திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 34,694. மற்றும் ஆந்திராவில் 22,018 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 34,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 20,85,584 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 93 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,244 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 31,319 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 16,36,790 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,42,191 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 22,018 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 13,88,803 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 96 பேர் உயிர் இழந்து இதுவரை 9,173 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 19,177 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 11,75,843 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,03,787 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஏழாம் இடத்தில் உள்ளது.