சென்னை
இன்று தமிழகத்தில் 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

ஒவ்வொரு வாரமும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு வெளியூரில் பணியாற்றக்கூடிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிடுவது வழக்கமாகும். அவர்களில் பலர் பேருந்துகள் மூலமே தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.
எனவே தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காகப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, மதுரை, நெல்லை, பெங்களூரு ஆகிய பகுதிகளில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோருக்கு ஏதுவாக சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
[youtube-feed feed=1]